மக்கள் தொடர்பு திட்டமுகாமில் நலத்திட்ட உதவிகள்..!

மக்கள் தொடர்பு திட்டமுகாமில்  நலத்திட்ட உதவிகள்..!
X

குமாரபாளையம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

குமாரபாளையம் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 2.11 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 2.11 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் அருகே படவீடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 306 பயனாளிகளுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் சுமன் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த முகாம்கள் அப்பகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கவும், அரசின் அனைத்து திட்டங்கள் குறித்தும் அனைத்து துறைகளின் மூலமாக கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து விளக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம் வட்டம், படவீடு கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற்றது.

மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளதையொட்டி, இப்பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு மாத காலத்திற்கு முன் வருவாய் கோட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகிய துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் படவீடு கிராம பகுதிக்கு வந்து கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மனுக்களை பெற்று வந்தனர்.

மேலும் அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேவையான பிற ஆவணங்கள் மனுதாரரிடமிருந்தும், வருவாய்த்துறை அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால் அந்த பணிகளையும் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் சுகாதாரத்துறையின் சார்பில் 5 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.10,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகமும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.32,000/- மதிப்பில் கல்வி உதவித்தொகையும், வருவாய்த்துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.1.28 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 41 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, 44 பயனாளிகளுக்கு ரூ.1.12 இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு ரூ.40,000/- மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.7,840/- மதிப்பில் தார்பாய்கள், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 1 விவசாயிக்கு ரூ.15,000/- மதிப்பில் புதிய மின் மோட்டார், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.1.86 இலட்சம் மதிப்பில், தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ.8.77 இலட்சம் மதிப்பில் பயணியர் வாகனம், 28 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர் அடையாள அட்டை, தொழிலாளர்கள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.25,400/- மதிப்பில் கல்வி உதவித்தொகை, கூட்டுறவுத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.27.15 இலட்சம் மதிப்பில் கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.40 இலட்சம் மதிப்பில் வங்கி கடன்,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.39,312/- மதிப்பில் சலவை பெட்டி, முன்னோடி வங்கி சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.9.00 இலட்சம் மதிப்பில் கல்வி கடன், படவீடு பேரூராட்சி சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.74,672/- மதிப்பில் தனி நபர் கழிப்பிட உதவித்தொகை, பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 3 பயனாளிக்கு ரூ.21,000/- மதிப்பில் பட்டு வளர்ப்பு பயிற்சி ஆணை, 1 பயனாளிக்கு பட்டு புழு வளர்ப்பாளர் அனுமதி புத்தகம், 47 பயனாளிக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகள் என மொத்தம் 306 பயனாளிகளுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் .சுமன் வழங்கினார்.

முன்னதாக அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

இம்முகாமில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் .சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .பிரபாகரன், படவீடு பேரூராட்சி தலைவர் .ராதாமணி, அட்மா குழுத்தலைவர் நாச்சிமுத்து உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil