குமாரபாளையத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட கமிட்டி கூட்டம்
குமாரபாளையத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்க மாவட்டகமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்க நாமக்கல் மாவட்ட கமிட்டி ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் பங்கேற்றார். கூட்டத்தில், விசைத்தறி சங்கத்தில் மூவாயிரம் பேர் மற்றும் கட்டுமான சங்கத்தில் ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதென முடிவு செய்யப்பட்டது. நேற்று முதல் தினசரி காலை, மாலையில் 2 மணி நேரம் தொழிலாளர்களை சந்தித்து உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உறுப்பினர் சேர்க்கையோடு, கிளைகளாக உருவாக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
தீபாவளிபண்டிகை நெருங்கிவரும் சூழலில் பள்ளிபாளையம் வட்டாரத்தில் போனஸ் பற்றிய பேச்சுவார்த்தைக்கான தேவை உள்ளது. கடந்தாண்டு 9.5 சதவீதம் போனஸ் என்பதை சி.ஐ.டி.யூ. சங்கம் ஏற்றுக்கொண்டது. ஒன்பதாண்டுகளாக இதே நிலை நீடிப்பதால் இன்றைய விலைவாசிக்கு இது ஏற்றதல்ல என்று ஏ.ஐ.சி.சி.டி.யூ. சங்கம் கையெழுத்திடாமல் வெளியேறியது. இப்போது 2022-23க்கும் அதே ஒப்பந்தத்தில்தான் போனஸ் தரப்படும் என்று முதலாளிகள் தெரிவித்துள்ளதால், இந்தாண்டுக்கான புதிய ஒப்பந்தம் போடப்படவேண்டுமென 7 முதலாளிகள் சங்கங்களுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென வட்டாட்சியரிடம் மனு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் பச்சியம்மாள், முருகன், சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu