பள்ளிபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு
பள்ளிபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பள்ளிபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் தொழில் வரி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பள்ளிபாளையம் நகராட்சி சாதாரண கூட்டமானது நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மூன்று மாதங்களுக்குப் பிறகு கூடியது. இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், ஆகியோர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் ,நகர்மன்ற கூட்டத்தில் தொழில்வரி மற்றும் இதர கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்த தீர்மானத்தை கண்டித்து, அதிமுக வார்டு உறுப்பினர்கள் ஏழு பேர் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து அதிமுக 4-வது வார்டு உறுப்பினர் செந்தில் கூறும் பொழுது, சென்ற ஆண்டுதான் வீட்டு வரி ,சொத்து வரி ,குடிநீர் வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டு, பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதேபோல இந்த ஆண்டு பால கட்டுமான பணிகள், விசைத்தறி தொழில் பாதிப்பு, அதிகரிக்கும் மின்சார கட்டணத்தால், சிறுகுறு தொழில்கள் பாதிப்படைந்த நிலையில், மேலும் சிறு குறு வியாபாரிகளை தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் அதிகளவு வரி உயர்வு தீர்மானமாக நகராட்சியால் கொண்டு வரப்பட்டுள்ளது .உதாரணமாக 1500 ரூபாயாக இருந்த வரி தற்போது 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாயாக இருந்தவரை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மும்மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.எனவே
இதனை கண்டித்து அதிமுக சார்பில் வெளிநடப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu