குமாரபாளையத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற அதிமுக எதிர்ப்பு
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி மற்றும் ஆதரவாளர்கள் நகராட்சி கமிஷனர் சசிகலாவை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினர்.
குமாரபாளையம் 12வது வார்டு காந்திபுரம் பகுதியில் சீரங்க செட்டியார் டேப் தறி பட்டறை வீதியில் வடிகால்களை சுத்தம் செய்ய முடியாத வகையில் அப்பகுதியினர் பலரும் தங்கள் வீடுகளின் முன்பு ஆக்கிரமிப்பு செய்து பாத்ரூம், திண்ணை, வாகனம் நிறுத்தும் இடம் என கட்டிக்கொண்டனர்.
இதனால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அதனை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நேற்றுமுன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ், பொக்லின் உதவியுடன் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதனை மேலும் தொடர நேற்றும் நகராட்சி அதிகாரிகள் சென்றதாக கூறப்படுகிறது. நகர அ.தி.மு.க. நகர செயலரும் கவுன்சிலருமான பாலசுப்ரமணி மற்றும் ஆதரவாளர்கள் பலரும் நகராட்சி கமிஷனர் சசிகலாவை நேரில் சந்தித்து, ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அ.தி.மு.க. நகர செயலரும், கவுன்சிலருமான பாலசுப்ரமணி கமிஷனரிடம் கூறுகையில், ஆக்கிரமிப்பு செய்வதை நிறுத்துங்கள். அதே வீதியில் பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஏழைகள் வீடுகளை குறி வைத்து இடிக்கிறார்கள். தம்மண்ணன் வீதியில் தேர் செல்லும் படியாக வடிகால் பாலம் சாலை மட்டத்திற்கு அமைக்க வேண்டும். சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மாதேஸ் என்பவர் 20 ஆண்டுகளாக கோழிக்கடை வைத்துள்ளார். அப்பகுதி தி.மு.க. கவுன்சிலரின் மகன் ஐயப்பன், கோழிக்கடை அகற்றப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பரிசீலிக்க வேண்டும். விதிமுறைகள் பின்பற்ற சொல்லுங்கள். அதனை அவர் செயல்படுத்துவார் என அவர் கோரிக்கை விடுத்தார்.
கமிஷனர் சசிகலா கூறுகையில், இனி இதுபோல் நடக்காது. நீங்கள் சொன்னது போல் தம்மண்ணன் சாலை தேர் செல்லும் வகையில் வடிகால் பாலம் அமைக்கப்படும். சின்னப்பநாயக்கன்பாளையம் கோழிக்கடை குறித்து நேரில் சென்று பார்த்து பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்கிறேன். நான் 33 வார்டுகளுக்கும் பொதுவான நபர். நடுநிலையாகத்தான் என் பணிகள் இருக்கும். ஒரு தலைபட்சமாக இருக்காது என தெரிவித்தார்.
எஸ்.ஒ. ராமமூர்த்தி, எஸ்.ஐ.செல்வராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu