அதிமுக.,விலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நகர்மன்ற தலைவர் ஆறுதல்
குமாரபாளையம் நகரமன்ற தலைவர் விஜய்கண்ணன் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகியும், தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவரும், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவருமான வெங்கிடு என்கிற வெங்கடேசனை நேரில் சந்தித்து அறுதல் கூறினார்.
குமாரபாளையம் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய்கண்ணன், நகர மன்ற தலைவர் தேர்தலில் 18 ஓட்டுக்கள் பெற்று நகரமன்ற தலைவராகவும், துணை தலைவராக முன்னாள் தி.மு.க. நகரச் செயலர் வெங்கடேசனும் வெற்றி பெற்றனர்.
இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைத்தனர். இதனைக் கண்டித்து நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன், கவுன்சிலர்கள் ரேவதி, பூங்கொடி, நந்தினிதேவி, கட்சி உறுப்பினர்களாக உள்ள இவர்களின் கணவர்கள் திருமூர்த்தி, வெங்கிடு(எ)வெங்கடேசன், ராஜகணேஷ் ஆகிய 7 பேரையும் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்தனர்.
தனக்கு ஆதரவளித்த அ.தி.மு.க. உறுப்பினர்களை நேரில் சந்தித்து கட்சி நீக்கம் குறித்து ஆறுதல் கூறி, உங்கள் வார்டுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தன்னால் இயன்ற வரை செய்து தர தயாராக உள்ளேன் என உறுதி கூறினார்.
இது குறித்து விஜயகண்ணன் கூறுகையில், அ.தி.மு.க. கவுன்சிலர்களான 3 பேரை தி.மு.க. வில் தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற தலைவர் வேட்பாளருக்கு ஓட்டு போட பிடிக்காததால், சுயேட்சையாக போட்டியிட்ட எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தனர். இவர்கள் மீது எந்தவித தவறும் இல்லை. இவர்களின் வார்டுக்கு மட்டுமல்ல அனைத்து வார்டுகளுக்கும் தேவையான அனைத்து பணிகளையும் பாகுபாடு இல்லாமல் செய்து தருவேன் என தெரிவித்தார்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சுயேட்சைக்கு ஓட்டு போட்டதற்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டது போல், சில அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க. வால் அறிவிக்கப்பட்ட நகரமன்ற தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தந்துள்ளனர். இவர்கள் மீதும் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்று கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதில் நகரமன்ற துணை தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu