பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!

பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல்   பணிமனை திறப்பு..!
X

பள்ளிபாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறக்கப்பட்ட நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

பள்ளிபாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது.

பள்ளிபாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது.

ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம்- முன்னாள் அமைச்சர் தங்கமணி பள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் பேச்சு.

எதிர்வரும் ஈரோடு பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பள்ளிபாளையம் நகர அதிமுக சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் முன்னாள் மின்துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட கழகச் செயலாளருமான தங்கமணி பங்கேற்று, தேர்தல் பணிமனையினை திறந்து வைத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் அதிகப்படியான வாக்குகளை வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் பெற்றுத் தந்து அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பேசிய அவர் ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம் என தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினை சேர்ந்த ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!