அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!

அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
X

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீதி வீதியாக வேனில் பிரசாரம் செய்தார்.

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீதி வீதியாக வேனில் பிரசாரம் செய்தார்.

அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி வேனில் பிரசாரம்.

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீதி வீதியாக வேனில் பிரசாரம் செய்தார்.

பாராளுமன்ற தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, அவற்றை அதிகாரிகள் பரிசீலனை செய்து வேட்புமனுக்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை சந்தித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அ.தி.மு.க., தே.மு.தி.க கூட்டணி வேட்பாளர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆற்றல் அசோக்குமார் திறந்த வேனில்

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வந்தார். குமாரபாளையம் தொகுதி உறுப்பினரும், அ.தி.மு.க கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி குமாரபாளையம் காவேரி நகர் பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் உடன் திறந்தவெளி வேனில் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

தங்கமணி பேசியதாவது:

குமாரபாளையம் விசைத்தறி தொழில் நிறைந்த பகுதி. தற்பொழுது விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. அதனைப் பாதுகாக்க மத்திய அரசிடம் கூறி நிவாரணம் பெற்று தரஆவண செய்யப்படும், தி.மு.க ஆட்சியில் மதுபானம் விற்பனை, போதைப் பொருட்கள் விற்பனை, லாட்டரி விற்பனை அதிகரித்து வருகிறது. இவற்றை களைய அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.இந்த பிரசார நிகழ்ச்சியில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க தொண்டர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!