"உங்களுக்கு என்ன பட்டா பாேட்டா காெடுத்திருக்கு" : பாெதுமக்களிடம் அதிமுக கவுன்சிலர் அடாவடி

தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி தண்ணீரை அம்மா மண்டப பணியாளர்கள் உபயோகப்படுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் அம்மா திருமண மண்டபம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. போர்வேல்களில் நீர்மட்டம் மிகவும் குறைந்ததால் சில வாரங்களாக இப்பகுதியில் ஊராட்சி சார்பில் தண்ணீர் வினியோகம் 2 நாட்களுக்கு ஒருமுறை 30 நிமிடம் மட்டும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் இப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை அம்மா மண்டப பணியாளர்கள் உபயோகப்படுத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கட்டுமான பணியாளர்கள், ஒப்பந்த மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் அங்கு வந்த ஊராட்சி தலைவர் புஷ்பா செல்லமுத்து கூறியதாவது: அம்மா மண்டப பணியாளர்கள் இனி மேல்நிலை நீர்தேக்க தொட்டி தண்ணீரை பயன்படுத்த மாட்டார்கள். லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து கட்டுமான பணிகள் செய்திட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது: இதன் பின் நேற்று அங்கு வந்த ஒன்றிய அ .தி.மு.க. கவுன்சிலர் செல்வம், அப்பகுதியில் குடிநீர் எடுத்து விடும் சுப்ரமணியின் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு, வாட்டர் டேங்க் தண்ணீர் எடுத்து விடும் சாவியை கொடு, என்று கேட்டார். அதற்கு சுப்ரமணியின் குடும்பத்தார் அவர் இல்லாமல் சாவியை தர முடியாது என்று கூறினார்கள். இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் செல்வம், உங்களுக்கு என்ன பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? என கேட்டு பெண்களிடம் பேசினார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu