அ.தி.மு.க. 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. 52வது ஆண்டு துவக்க   விழா பொதுக்கூட்டம்
X

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. 52வது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது. இதில் பேசிய குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் நிர்வாகிகள், தி.மு.க. அரசின் அராஜக போக்கை கண்டித்து பேசினார்கள். முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன், கவுன்சிலர்கள் பழனிசாமி, புருஷோத்தமன், நகர துணை செயலர் திருநாவுக்கரசு, பள்ளிபாளையம் நிர்வாகிகள் செந்தில், வெள்ளிங்கிரி, சுப்பிரமணி, உள்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளிபாளையம் ஒன்றிய செயலர் செந்தில் பேசியதாவது:

தி.மு.க.வினர் எதுவும் செய்வது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. ஏனெனில், முன்னாள் அமைச்சர் தங்கமணி குமாரபாளையம் நகருக்கு தேவையான எல்லாம் செய்து தந்து விட்டார். அதனால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் விதி மீறி பல சட்ட விரோத செயல்களை செய்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் தங்கமணியை தோற்கடிக்க பல வியூகங்கள் செய்து வருவதாக அறிந்தேன். இனி ஒருவன் பிறந்து தான் வரவேண்டும். தங்கமணியை தோற்கடிக்க. இவ்வாறு அவர் பேசினார்.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அ.தி.மு.க. நகராட்சி தலைவர் தனசேகரன் பங்கேற்றார்.

நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த முன்னாள் அ.தி.மு.க. நகராட்சி தலைவர் தனசேகரன் நேற்று வந்ததும், . நகர செயலர் உள்ளிட்ட நகர, வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் என அனைத்து தரப்பினரும் இவரை வரவேற்றனர். முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன், அ.தி.மு.க.வில் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அப்போதைய நகர செயலர் நாகராஜனுக்கு முன்னாள் சீட் கொடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தனசேகரன், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று, நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil