பள்ளிபாளையம்: வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்து பயிற்சி முகாம்
ஒடப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில், வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரம் ஒடப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில், வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்பது குறித்த பயிற்சி முக், வேளாண்மை உதவி இயக்குநர் சி.கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. வேளாண் துறையில் உள்ள திட்டங்களை, உதவி இயக்குனர் விவரித்தார்.
இப்பயிற்சியில், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) நாச்சிமுத்து கலந்து கொண்டார். அவர், அட்மா திட்டம் பற்றியும், உழவன் செயலியின் நன்மைகள் பற்றியும் தெளிவாக கூறினார். இளநிலை பொறியாளர் வெங்கடாசலபதி, வேளாண் பொறியியல் துறையில் உள்ள திட்டங்கள், வாடகை இயந்திர மையங்கள் ஆகியன பற்றி கூறினார்.
மேலும், வினோத், பன்னீர்செல்வம் ஆகியோர் டிராக்டர், ரொட்டா வேட்டர், பவர் வீடர், பவர் டில்லர் ஆகியவற்றை பயன்படுத்தும் முறைகள் மற்றும் பராமரிப்பு குறித்து விளக்கினர். பயிற்சி முகாமில் செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு தேவையான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் பாலாஜி, அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் பாரதி மற்றும் பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu