குமாரபாளையத்தில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

குமாரபாளையத்தில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு
X
குமாரபாளையம் காந்திபுரத்தில், கீழே விழுந்து தலையில் அடிபட்டதில், மூதாட்டி பலியானார்.

நாமக்கல மாவட்டம், குமாரபாளையம் கிழக்கு காந்திபுரத்தில் வசிப்பவர் சவுண்டம்மாள், 75. கடந்த 12-ஆம் தேதி பகல் 2:00 மணியளவில், வீட்டை விட்டு வெளியில் வரும்போது நிலை தடுமாறி, வீட்டின் முன் கீழே விழுந்தார். இதில், அவரது தலையில் பலத்த அடிபட்டது.

இதையடுத்து, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!