பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்பு

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்பு
X
பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவரை, தீயணைப்புத்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பவானி அருகே திப்பிசெட்டிபாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் இருந்து, தன்னை காப்பாற்றுமாறு ஒரு ஆண் கூக்குரல் சத்தம் நேற்று மாலை கேட்டது. அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நிலையில், முள்புதருக்குள் ஒருவர் சிக்கியிருந்தது தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், ஆற்றுக்குள் இறங்கி, புதரில் சிக்கியிருந்த முதியவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், அவர் சேலம் மாவட்ட கொண்டலாம்பட்டியை சேர்ந்த சீரங்கன், 60, என்பதும், மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!