2 ஆண்டுகளுக்கு பின் வாய்க்காலில் வந்த தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி

2 ஆண்டுகளுக்கு பின் வாய்க்காலில் வந்த தண்ணீர்   விவசாயிகள் மகிழ்ச்சி
X

குமாரபாளையம் அருகே மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையம் வாய்க்காலில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையம் வாய்க்காலில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை மற்றும் குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதியில் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் உள்ளது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், காவிரி ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் கடும் வேதனையில் இருந்து வந்தனர்.

நிலத்தடி நீரும் இல்லாமல், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். கால்நடைகளுக்கு கூட போதிய தண்ணீர் கிடைக்காத நிலை நீடித்தது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமானது. அணை நிரம்பிய நிலையில் காவிரி ஆற்றில் உபரி நீர் முழுதும் வெளியேற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் நேற்றுமுன்தினம் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:

இரண்டு ஆண்டுகளாக வாய்க்காலில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இதனால் பயிர் வகைகள் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டதுடன், கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், தங்கள் நிலங்களை பயிர் செய்ய ஏற்ற வகையில் உழுது வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
சாக்லேட் தான  அப்டினு அசால்ட்டா எடுக்காதீங்க..! அதனால நன்மையையும் இருக்கு.. தீமையும் இருக்கு..!