குமாரபாளையத்தில் பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்க ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் நடந்த பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்கம் ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று பேசினார்.
குமாரபாளையத்தில் நடந்த பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்கம் ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்கம் ஆலோசனை கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுபாட்டுத் துறை அலுவலர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமாரபாளையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சிறு, குறு, பெரு சாயப்பட்டறை உரிமையார்கள், சலவைத் தொழில் செய்து வருபவர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.
சாயப்பட்டறை கழிவுகள் காவேரி ஆற்றில் கலப்பதாக புகார்கள் வரபெற்றன. இதன் அடிப்படையில் பல்வேறு சாயப்பட்டறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாயப்பட்டறை மற்றும் சலவைத் தொழில் நலிவடையாமலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பொதுமக்களின் சுகாதாரம் பாதிப்படையாமல் இருக்க பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறை இயக்கத்தினை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே பூஜ்ய கழிவு நீர் சுத்திகரிப்பு முறையினை தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் 122 சலவை மற்றும் சாயப்பட்டறைகள் உள்ளன. மேலும் இந்த தொழிலை பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தின் கீழ் 303 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்து தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பரிசீலினை செய்து நிதி ஒப்பளிப்பிற்கு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மேற்படி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டவுடன் பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ள பல்லக்கா பாளையம், எலந்தகுட்டை மற்றும் சௌதாபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதன் மூலம் சலவை மற்றும் சாயப்பட்டறை கழிவு நீரற்ற சுத்திகரிப்பு முறை உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் இன்றையதினம் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கவுள்ள இடத்தினை நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பெறுவதற்காக அனைத்து பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் பொது சுத்திகரிப்பு மையம் அமைத்து சலவை மற்றும் சாயப்பட்டறைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா, பள்ளிபாளையம், குமாரபாளையம், நாமக்கல் நகராட்சி ஆணையர்கள் தாமரை, ராஜேந்திரன்(பொ) சென்னுகிருஷ்ணன், மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சந்தான கிருஷ்ணன், குணசேகரன், உதயன் சாயப்பட்டறை சங்க நிர்வாகிகள் அசோகன், பிரபாகரன் உள்ளிட்ட உட்பட அரசுத்துறை அலுவலர்கள், சாய மற்றும் சலவை தொழிற்சாலை உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu