அரிமா சங்கங்கள் நடத்திய ஆலோசனைக்குழு கூட்டம்

அரிமா சங்கங்கள் நடத்திய ஆலோசனைக்குழு  கூட்டம்
X

பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில், குமாரபாளையத்தில் நடந்த மாவட்ட ஆளுனரின் மூன்றாவது ஆலோசனைகுழு கூட்டத்தில், மாணவிக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில், மாவட்ட ஆளுனரின் மூன்றாவது ஆலோசனைகுழு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.

பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில், மாவட்ட ஆளுனரின் மூன்றாவது ஆலோசனைக்குழு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது

பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில், மத்திய அரிமா சங்கம் ஏற்று நடத்தும் மாவட்ட ஆளுனரின் மூன்றாவது ஆலோசனைக்குழு கூட்டம் மற்றும் வட்டார சங்கங்களின் கூட்டுக்கூட்டம் வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமையில் குமாரபாளையத்தில் நடந்தது.

முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் பங்கேற்று, ரத்த தான முகாம், பொது சிகிச்சை முகாம், இருதய சிகிச்சை முகாம், கண் சிகிச்சை முகாம், கண்கள் தானம் பெறுதல் , ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்காக உதவுதல் உள்ளிட்ட அரிமா சங்கங்கள் செய்ய வேண்டிய சேவைப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் மாணவி ஒருவருக்கு 20 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் வழங்கப்பட்டது.

மத்திய அரிமா சங்கம், தளபதி அரிமா சங்கம், கபிலர்மலை அரிமா சங்கம் உள்ளிட்ட ஐந்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இரண்டாம் துணை ஆளுநர் விஸ்வநாதன், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மோகன், சந்திரசேகரன்,மாவட்ட தூதுவர் ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!