புதிய மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள் அகற்ற கோரிக்கை

புதிய மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள்   அகற்ற கோரிக்கை
X

குமாரபாளையம் சேலம் சாலையில் புதிய உயர் மின் கம்பங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பர தட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

குமாரபாளையத்தில் புதிய மின் கம்பங்களில் கட்டப்பட்ட விளம்பர தட்டிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமாரபாளையத்தில் புதிய மின் கம்பங்களில் கட்டப்பட்ட விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, ரேவதி கூறியதாவது:

சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகள் கம்பங்கள் டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு ஒரு கம்பத்திற்கு 2 எல்.இ.டி. விளக்குகளும், சில இடங்களில் ஒரு கம்பத்திற்கு ஒரு எல்.இ.டி. விளக்கும் ஆக 129 விளக்குகள் புதிதாக அமைக்கும் பணி, நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இவைகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த உயர் மின் கம்பங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் தீபாவளி வியாபார விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடக்கத்திலேயே அகற்றாவிட்டால் விபத்து ஏற்பட்டு பலரும் பாதிக்கபடும் நிலை ஏற்படும். எனவே, உடனே இது போன்ற அனுமதி இல்லமால் மின் கம்பங்களில் பேனர் கட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பேனர்கள் அகற்றப்படவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
ai in future agriculture