73 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் வெற்றி

73 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் வெற்றி
X

குமாரபாளையம் அருகே 73 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றார்.

குமாரபாளையம் அருகே 73 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற்றார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி 11வது வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. ஓட்டு சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலில் சக்திவேல் சாவி சின்னத்திலும், நாகராஜன் சீப்பு சின்னத்திலும் போட்டியிட்டனர். மொத்தம் 2 ஆயிரத்து ஐம்பது ஓட்டுகளில் ஆயிரத்து இருநூற்று அறுபத்து ஒன்று வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இதில் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற நாகராஜன் 73 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற நாகராஜ்-க்கு ஊர் பொதுமக்கள், அ.தி.மு.க. ஊராட்சி நிர்வாகி குமரேசன் உள்ளிட்ட பலரும் மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!