குமாரபாளையத்தில் வார்டு வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தும் அ.தி.மு.க.

குமாரபாளையத்தில் வார்டு வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தும் அ.தி.மு.க.
X

குமாரபாளையத்தில் வார்டு வாரியாக அ.தி.மு.க.வினர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் வார்டு வாரியாக அ.தி.மு.க.வினர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் வார்டு வாரியாக அ.தி.மு.க.வினர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். குமாரபாளையத்தை தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தது, அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வந்தது, கூட்டு குடிநீர் திட்டம் அமைத்தது, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இடம் தேர்வு செய்தது, புதிய தாலுகா அலுவலகம் கட்ட அனுமதி மற்றும் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற்றுத் தந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தங்கமணி செய்து கொடுத்துள்ளார்.

எம்.எல்.ஏ.நிதியில் பல்வேறு சாலைப்பணிகள், வடிகால், குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் செய்து கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப். 19ல் வருவதையொட்டி, அ.தி.மு.க. சார்பில் செய்து கொடுத்த நலத்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச்சொல்லி, அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் நகரில் உள்ள 33 வார்டுகளில், வார்டு வாரியாக ஆலோசனை கூட்டம் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வீடு, வீடாக விநியோகம் செய்து, அ.தி.மு.க.விற்கு ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

Tags

Next Story
ai solutions for small business