வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
X

குமாரபாளையம் அருகே கிராமப்புற பகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

குமாரபாளையம் அருகே கிராமப்புற பகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாநிலம் முழுதும் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால், ஊரடங்கு அறிவித்ததால் எம்.எல்.ஏ,. தங்கமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணி, காலம் தாழ்ந்து கொண்டே போனது.

எம்.எல்.ஏ. தங்கமணி பள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தட்டான்குட்டை, பெரியார் நகர், காந்தி நகர், சடையம்பாளையம், வட்டமலை, எதிர்மேடு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் வழி நெடுக ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தங்கள் குறைகளை பலரும் கோரிக்கை மனுவாக கொடுத்தனர். அதனை படித்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்

Tags

Next Story
future of ai in retail