அதிமுக வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுக வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
X

பொதுக்குழு சம்பந்தமான தீர்ப்பு முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்ததால், அதை குமாரபாளையம் அ.தி.மு.க.வினர் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றத்தீர்ப்பை வரவேற்று குமாரபாளையத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

பொதுக்குழு சம்பந்தமான தீர்ப்பு முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்ததால், அதை குமாரபாளையம் அ.தி.மு.க.வினர் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன், நகர துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் புருஷோத்தமன், நிர்வாகிகள் ரவி, அர்ச்சுணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தியேட்டர் பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி அதிமுக நிர்வாகி குமரேசன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!