பாலியல் புகாரில் 230 ஆசிரியர்கள் ஜெயிலில் உள்ளனர். அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தகவல்

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. ஒன்றிய அளவிலான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

பாலியல் புகாரில் 230 ஆசிரியர்கள் ஜெயிலில் உள்ளனர்.

அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தகவல்

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. ஒன்றிய அளவிலான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. ஒன்றிய அளவிலான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலர்கள் குமரேசன், செந்தில் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் தங்கமணி, மாநில அம்மா பேரவை இணை செயலர் பிரபு பங்கேற்றனர்.

இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:

பூத் கமிட்டி உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று, அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்பான திட்டங்களை எடுத்து சொல்லுங்கள். ஊரில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், இறந்தவர்கள் என கவனமாக கவனியுங்கள். இதெல்லாம் பூத் லிஸ்ட் இல் குறித்து கொண்டால், மற்ற கட்சியினர் கள்ள ஒட்டு போடுவதை தடுக்க முடியும். அடுத்து அமையப்போகும் ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சிதான். அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படும் ஆட்சியாக தற்போதைய ஆட்சி இருந்து வருகிறது. நாங்கள் எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் கொண்டு வந்தோம். தாலிக்கு தங்கம், லேப்டாப், அம்மா ஸ்கூட்டி, உள்பட அனைத்து திட்டங்களும் நிறுத்தி விட்டார்கள். நான்கு ஆண்டு காலமாக போதை பொருள் நிறைந்த மாநிலமாக உருவாக்கி விட்டார்கள். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் எளிதில் கஞ்சா கிடைக்க கூடிய, முன்னோடி மாநிலமாக நம் தமிழகம் இருந்து வருகிறது. தினமும், கொலை, செயின் பறிப்பு உள்ளிட்ட சட்டம், ஒழுங்கு நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, சீர் கெட்டு விட்டது. பாலியல் புகார்களினால், மாணவிகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. பெற்றோர்கள், ஆசிரியர்களை நம்பி தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறார்கள். தற்போது பாலியல் புகாரில் 230 ஆசிரியர்கள் ஜெயிலில் உள்ளனர். இது போன்ற ரவுடிகளுக்கு கொலைகாரர்களுக்கு, திருடர்களுக்கு, பாலியல் நபர்களுக்கு, கஞ்சா வியாபாரிகளுக்கு பயம் இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி இருந்து வருகிறது. மக்கள் எல்லோரும் சொல்வது, மீண்டும் இடைப்பாடியார் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். இடைப்பாடியார் தலைமையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து, மீண்டும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என உறுதி ஏற்போம். இங்கிருக்கும் நிர்வாகிகள் தயவால், உங்களால் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சாலை, வடிகால், குடிநீர், உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட பணிகள் செய்து கொடுத்து உள்ளேன். இந்த நான்கு ஆண்டு காலமாக, குடிநீர், சாலை, வடிகால் வசதி உள்பட எந்த திட்டமும் நடைபெறவில்லை. கோடை காலத்தில் காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால், குடிநீர் தேவைக்காக, மேட்டூரில் இருந்து, 400 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்து, தட்டான்குட்டை, பல்லக்காபாளையம், படைவீடு, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் எப்பவும் கிடைக்க செயல்படுத்தி உள்ளோம். தாலுக்கா அலுவலகம், தீயணைப்பு நிலையம், அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட அனைத்தும் கொண்டு வந்துள்ளோம். தற்போது கள்ள சாராயம், சந்து கடை, கஞ்சா வியாபாரம் என பெருகியுள்ள இந்த ஆட்சியை அகற்றி, அண்ணன் இடைப்படியார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. ஒன்றிய அளவிலான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

Next Story