குமாரபாளையத்தில் மனநலம் பாதித்த பெண் காப்பகத்தில் சேர்ப்பு

குமாரபாளையத்தில் மனநலம் பாதித்த பெண் காப்பகத்தில் சேர்ப்பு
X

குமாரபாளையத்தில் மனநலம் பாதித்த பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

குமாரபாளையத்தில் மனநலம் பாதித்த பெண்ணை போலீஸ் எஸ்.ஐ., காப்பகத்தில் ஒப்படைத்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலையில் கிழிந்த ஆடையுடன் சில நாட்களாக சுமார் 40 வயதுடைய மன நலம் பாதித்த பெண் சுற்றித்திருந்தார்.

இது பற்றி குமாரபாளையம் போலீசாருக்கு மனித உரிமை கழக நிர்வாகிகள் செந்தில்குமார், அசோக்குமார் தகவல் தெரிவித்தனர். குமாரபாளையம் வட்டமலை அன்னை காப்பகம் நடத்தி வரும் ஹேமமாலினியிடம் எஸ்.ஐ. மலர்விழி அந்த பெண்ணை ஒப்படைத்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!