குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்புகள் கட்ட ஏடிஜிபி., விஸ்வநாதன் ஆய்வு

குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்புகள் கட்ட ஏடிஜிபி., விஸ்வநாதன் ஆய்வு
X

குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்பு கட்ட ஆய்வு செய்த ஏ.டி.ஜி.பி. விஸ்வநாதன்.

குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்புகள் கட்ட வீட்டுவசதிப் பிரிவு ஏடிஜிபி., விஸ்வநாதன் இன்று ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்புகள் கட்ட பல இடங்களில் ஆய்வு நடத்தியும், இதுவரை ஒரு இடம் கூட தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் வீட்டுவசதி பிரிவு ஏ.டி.ஜி.பி. விஸ்வநாதன் இன்று சென்னையிலிருந்து குமாரபாளையத்திற்கு வருகை தந்தார். பின்னர், காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்காக எஸ்.எஸ்.எம். கல்லூரி பின்புறம் உள்ள இடத்தை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது, ஏ.டி.எஸ்.பி. மணிமாறன், திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, மற்றும் பொறியாளர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து பொறியாளர் குழுவினர் கூறுகையில், இந்த இடத்தில் காவலர் குடியிருப்பு கட்ட வீட்டுவசதி பிரிவு ஏ.டி.ஜி.பி. விஸ்வநாதன் ஆய்வு செய்ய வந்தார். 44 சென்ட் இடம் உள்ள இங்கு 32 போலீசார் குடியிருப்புகள் 4 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
photoshop ai tool