மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அரசு கூடுதல் தலைமை செயலர்

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட  அரசு கூடுதல் தலைமை செயலர்
X

பள்ளிபாளையம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை அரசு கூடுதல் தலைமை செயலர் தயானந்த் கட்டாரியா பார்வையிட்டார். அருகில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உள்ளார்.

பள்ளிபாளையம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை அரசு கூடுதல் தலைமை செயலர் பார்வையிட்டார்.

பள்ளிபாளையம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட், ஆலாம்பாளையம் பேரூராட்சி சத்யா நகர் உள்ளிட்ட பல இடங்களில் மழை வெள்ள பாதிப்புகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில், அரசு கூடுதல் தலைமை செயலர் தயானந்த் கட்டாரியா பார்வையிட்டார். நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மழை வெள்ள பாதிப்பு பகுதிகள் மற்றும் அதன்பின் சீரமைக்கப்பட்ட பின் எடுக்கப்பட்ட போட்டோ தொகுப்பு காட்சிகளை பார்த்தார்.

ஆலாம்பாளையம் பேரூராட்சி சத்யா நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓடைப்பகுதிகள் பொக்லின் உதவியுடன் சீரமைக்கப்பட்டதையும், நகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் பல்வேறு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.

இதில் டி.ஆர்.ஒ. துர்கா மூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், நெடுஞ்சாலை கோட்டபொறியாளர் சசிகுமார், ஆர்.டி.ஒ. இளவரசி, நகராட்சி கமிஷனர் ரவிசந்திரன், தாசில்தார் தமிழரசி, உள்பட பலர் பங்கேற்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!