தி.மு.க. ஆட்சி மக்கள் முன்னற்றத்துக்கு தடையாக உள்ளனர் : நடிகை கவுதமி பேச்சு..!
நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு
மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பது, தி.மு.க. ஆட்சியாளர்கள் அவர்களின் செயலால் நிரூபித்து வருகின்றனர் என்று நடிகை கவுதமி பேசினார்.
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து நடிகை கவுதமி பேசினார்.
தி.மு.க.வினர், பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இளம் விதவைகள் உருவாகி வருகிறார்கள் என்று கூறினார்கள். ஆனால் இவர்கள் மதுக்கடைகளை மூடினார்களா? நீட் தேர்வு ரத்து, விவசாய கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து என பொய்களை அடுக்கினர்.
நம் வீட்டு ஆண் பிள்ளைகள் போதை பழக்கத்தால் சீரழிந்து வருகிறார்கள். போதை பொருள் விற்பனையாளர்களுக்கும், தி.மு.க. ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு உள்ளதாக சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நம் வீட்டு பெண் குழந்தைகள் கல்லூரி, அல்லது வேலைக்கு சென்று பத்திரமாக திரும்பி வர முடிகிறதா? பயந்து கொண்டுதான் அனுப்ப வேண்டியுள்ளது இந்த ஆட்சியில். ஆட்சியாளர்கள் ஆதரவு இல்லாமல் தீய சக்திகள் சமுதாயத்தில் வளர முடியாது. விலைவாசி உயர்வால் சொகுசு வாழ்க்கை என்பதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. அத்தியாவசிய தேவைகள் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்ற நிலையில்தான் தாய்மார்கள் உள்ளனர்.
இரு சக்கர வாகன திட்டம், தாலிக்கு தங்கம் திட்டங்கள் முடக்கி விட்டார்கள். மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். ஏன், மூன்று மடங்கு மின்கட்டணம் போடுகிறீர்கள் என்று கேட்டால், அப்படி தன் வரும், இஷ்டம் இருந்தால் பணம் கட்டு, இல்லையென்றால் பியூஸ் பிடுங்கி விடுவோம் என மின் வாரிய அதிகாரிகள் தமிழகம் முழுதும் மிரட்டி வருகிறார்கள். வீடு என்பது ஒவ்வொருவர் கனவு. அது இப்போது எட்டாக்கனியாக உள்ளது. காரணம் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு. தி.மு.க.வினர்தான் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பது, தி.மு.க. ஆட்சியாளர்கள் அவர்களின் செயலால் நிரூபித்து வருகின்றனர்.
மக்களுக்காக எப்பவும் முன்வந்து உதவும் கட்சி அ.தி.மு.க.தான். அரசு கலைக்கல்லூரி அமைத்து தந்தவர் இந்த தொகுதி எம்.எல்.ஏ. தங்கமணி. தமிழகத்தில் முதன்முறையாக புதைவட மின்பாதை அமைத்து சாதித்து காட்டியவர் தங்கமணி. ஆற்றல் அசோக்குமார் சேவை மனப்பான்மை உள்ளவர்.பல வருடங்களாக ஆன்மீக சேவை, கல்வி சேவை, பத்து ரூபாய் உணவு திட்டம் தொடங்கி நடத்தி வருகிறார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு வழங்கி வெற்றி பெற செய்யுங்கள். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், இரட்டை இலைக்கு வாக்களிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu