விஜய் பிறந்தநாள்: மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய ரசிகர்கள்

விஜய் பிறந்தநாள்: மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய ரசிகர்கள்
X

விழாவில் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு, நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அறுசுவை உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.

பள்ளிபாளையத்தில், நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கி, அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், நடிகர் விஜய் பிறந்த நாளை அவரது ரசிகர்ள் விமரிசையாக கொண்டாடினர். நகர இளைஞரணி, தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக, நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிப்பாளையம் குட்டைமுக்கு பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சங்க அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அத்துடன், 50-க்கும் மேற்பட்டோருக்கு அசைவ உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!