குமாரபாளையம் பகுதியில் 16 சாய ஆலைகளில் மின் இணைப்பு துண்டிப்பு

குமாரபாளையம் பகுதியில் 16 சாய ஆலைகளில் மின் இணைப்பு துண்டிப்பு
X

சாய ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்த குழுவினர். 

விதிமீறல் காரணமாக, குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதியில், 16 சாய ஆலைகளில் மின் இணைப்பு துண்டிக்கபட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் செல்வகுமார் விடுத்துள்ள அறிக்கை: ஈரோடு, பவானி பள்ளிபாளையம், கரூர் பகுதிகளில் அமைந்துள்ள சாய, சலவை மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில், சட்ட விரோதமாக சாய மற்றும் சலவை ஆலைகள், அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமல் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் வெளியேற்றி உள்ளன. அவ்வகையில், 16 தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டது.

தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய தலைமை அலுவலகம் வாயிலாக, தொழிற்சாலைகள் மூடுவதற்கான உத்தரவும், மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்திற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, மேற்கண்ட 16 தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story