குமாரபாளையத்தில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை

குமாரபாளையத்தில்  அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை
X

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான வினாடிவினா போட்டியில் சாதனை படைத்ததையொட்டி கல்லூரி தலைவர் இளங்கோ, கல்லூரி முதல்வர் பாலமுருகன் பாராட்டினர்.

குமாரபாளையத்தில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்திய அளவில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் கோவை கஸ்தூரி சீனிவாசன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள 44 பொறியியியல் மாற்று பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 106 அணிகள் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தினர். ஜவுளி தொழில்நுட்பத்தில் 43 ஆண்டுகள் அனுபவம் பெற்ற குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 5 அணிகள் பங்கேற்றன.

இதில் விகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய இரு மாணவர்களை கொண்ட அணி இரண்டாவது பரிசாக 15 ஆயிரம் பரிசாக வென்றனர். பங்கேற்ற அனைவர்க்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தலைவர் இளங்கோ, முதல்வர் டாக்டர் பாலமுருகன் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி பாராட்டினர். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பாராட்டினர்.

Tags

Next Story