கம்பத்துகாரர் சிறப்பு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை
குமாரபாளையம் கம்பத்துகாரர் சிறப்பு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் குமாரபாளையம் கம்பத்துகாரர் சிறப்பு பள்ளியில் இருந்து கலந்து கொண்ட சாமுவேல் இறகு பந்து போட்டியில் முதலிடம் மற்றும் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடமும், ஸ்வேதா ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடமும், குண்டு எறிதலில் இரண்டாமிடமும், நித்தியலட்சுமி குண்டு எறிதலில் முதலிடமும், சரண்யா ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் குண்டு எறிதலில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.
இவர்களுக்கு தாளாளர் உமா மகேஸ்வரி, தலைவர் விஜயகுமார், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினர். சிறப்பு பயிற்சியளித்த சிறப்பு ஆசிரியர்கள் லிடியா, கண்மணி, உதவி ஆசிரியர்கள் மஞ்சு, ரேவதி, தசை பயிற்சியாளர் ராஜபாண்டியன் ஆகியோருக்கு நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu