ராயல் இன்டர்நேஷனல் பள்ளி சி.பி.எஸ்.இ, ஜே.இ.இ தேர்வில் சாதனை..!
குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ,
ஜே.இ.இ தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ,ஜே.இ.இ தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜே.இ.இ.முதன்மை தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவர்கள் ஹரேஷ் 99.54 சதவீதமும், பாலவிஷ்ணு 97.57 சதவீதமும், கொம்பன் அர்ஜுன் 96.24 சதவீதமும், கவின் 95.27 சதவீதமும், தேவபிரசாந்த் 91.93 சதவீதமும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் என்.ஐ.டி கல்லூரியில் சேருவதற்கும் மற்றும் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளார்கள்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் அன்பழகன்,செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்த், முதல்வர்.ராஜஸ்ரீ, அகாடமிக் டைரக்டர் விஜய் கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டினார்கள். குமாரபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளியின் 14 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
குமாரபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளியின் 14 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் தாளாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.ஒலிம்பிக் தீபத்தை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக வந்த மாணவ, மாணவியர் விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்தனர். சிறப்பு விருந்தினராக குழந்தை நல மருத்துவர் செந்தில்குமார்
பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார்.விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இயற்கைப் பேரழிவு , நீர் பாதுகாப்பு, சூரியனின் சக்தி போன்ற தலைப்புகளில் குழந்தைகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கராத்தே ,யோகா, உடற்பயிற்சி சாகசங்களை செய்து காட்டினர். இளையோர், மூத்தோருக்கான 80 மீ, 100 மீ ,200மீ தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு ,வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளும், கேடயம் மற்றும் கோப்பைகளை குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா வழங்கினார். .செயலாளர் முருகேசன், உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu