குமாரபாளையத்தில் மாணவ, மாணவிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம்..!

குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவியர் பள்ளி நேரம் முடிந்து மாலையில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் ஆபத்தான முறையில், மிகுந்த அச்சத்துடன் சேலம் சாலையை கடந்து செல்கின்றனர்.
குமாரபாளையம் அரசு பள்ளி சாலை பகுதியில் விபத்து அச்சத்தில் மாணவ, மாணவியர் சாலையை கடந்து வருகிறார்கள்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி நேரம் முடிந்து மாலை 04:30 மணியவில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் சேலம் சாலையை கடந்து செல்கின்றனர். அப்போது வேகமாக வரும் வாகனங்கள் மாணவ, மாணவியர் மீது மோதி, அதிக விபத்துகள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
அதனால், மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை இன்றும் தொடர்கிறது. சில நாட்கள் போலீசார் வந்து போக்குவரத்துக்கு சரி செய்வார்கள். பெரும்பாலான நாட்கள் போலீசார் இருப்பதில்லை. உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பல பணிகள் காரணமாக வேறு ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். புறவழிச்சாலையில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் உள்ளது. அவர்களும் நகர எல்லைப் பகுதியில் வந்து போக்குவரத்து சீர் செய்வதில்லை.
கத்தேரி பிரிவு பகுதியில் அதிக வாகனங்கள் சேலம் கோவை புறவழிச்சாலையை கடந்து செல்லும் நிலையும் நீடித்து வருகிறது. அங்கும் விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது. ஆனங்கூர் பிரிவு பகுதியில் நடை மேம்பாலமும், கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலமும் அமைத்து, விபத்துக்களை தடுக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. பொதுமக்கள், மாணவ, மாணவியர் மிகவும் பாதிக்கபட்டு வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முன்பு இதற்கான பணியை செய்தால் அனைவருக்கும் பயன் மிக்கதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu