பள்ளிபாளையத்தில் பைக் மோதியதில் முதியவர் பலி

பள்ளிபாளையத்தில் பைக் மோதியதில் முதியவர் பலி
X
பள்ளிபாளையத்தில் பைக் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஈ. காட்டூர் பகுதியில் வசித்தவர், அவினாசி கவுண்டர், 70. விவசாயி. இவர் மாலை 04:30 மணியளவில், அப்பகுதி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த டூவீலர் ஓட்டுனர், இவர் மீது மோதியதில், பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார்.

இது குறித்து, வெப்படை எஸ்.ஐ. வெற்றிவேல் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில், யமஹா டூவீலர் ஓட்டி வந்த நபர் தங்கராஜ், 35, என்பதும், இவர் பைக் மெக்கானிக் வேலை செய்து வருபவர் என்பதும் தெரிய வந்தது. தங்கராஜை வெப்படை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story