டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பலி

டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் கூலித்  தொழிலாளி பலி
X
குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பலியானார்

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பலியானார்.

குமாரபாளையம் நடராஜா நகர் பகுதியில் வசிப்பவர் விஷ்ணுராம், 19. இவரது நண்பர் பெருமாள், 20. இருவரும் துண்டு மடிக்கும் கூலி வேலை செய்து வருகிறார்கள். நேற்றுமுன்தினம் மாலை 06:15 மணியளவில் குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை விஷ்ணுராம் ஓட்ட, பெருமாள் பின்னால் உட்கார்ந்து வந்தார். பின்னால் வந்த லாரி இவர்கள் மீது மோதியதில், இருவரும் கீழே விழுந்தனர். இதில் விஷ்ணுராம் இடுப்பு பகுதியில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. ஆனால் லாரி நிற்காமல் சென்றது. விஷ்ணுராமை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு ௦௮:50 மணிக்கு இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai powered agriculture