குமாரபாளையம் அருகே விபத்து: மனைவி கண்ணெதிரே கணவன் உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே விபத்து: மனைவி கண்ணெதிரே கணவன் உயிரிழப்பு
X

பைல் படம்.

Today Accident News in Tamil -குமாரபாளையம் அருகே மனைவி கண்ணெதிரே கணவன் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Today Accident News in Tamil-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தட்டான்குட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பிரபு, 28. கூலித்தொழிலாளி. இவரும், இவரது மனைவி லோகநாயகி இருவரும் சேலம்-கோவை புறவழிச்சாலை, வட்டமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 07:00 மணியளவில் நடந்து சாலையை கடக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி லோகநாயகிக்கு லேசான காயமும், பிரபுவுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் ஜி.ஹெச்.கொண்டு வருவதற்குள் பிரபு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

குமாரபாளையம் அண்ணா நகர், பழைய பாலம் பகுதியில் வசிப்பவர்கள் சரவணன், 38, செந்தில், 37. கூலித்தொழிலாளர்கள். இவர்கள் குடித்து விட்டு, காவேரி ஆற்றுக்கு வருவோரையும், செல்வோரையும் தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டு இருந்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்ததின் பேரில் குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று அவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். பின்னர், இருவர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு சமத்துவபுரத்தில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி, 27. இவர் வேலை முடிந்து காலனி ஆஸ்பத்திரி அருகே சாலையை கடக்க நிற்கும் போது, வேகமாக வந்த ஹோண்டா வாகனம் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். வாகனத்தை ஒட்டி வந்த ஈரோட்டை சேர்ந்த பூபதி, 21, என்பவரும் காயமடைந்தார். இருவரும் சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்செங்கோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன், 36. தனியார் நிறுவன பணியாளர். இவர் ஆனங்கூர் சாலை காவடியான்காடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த பென்ஸ் கார் ஓட்டுனர் இவர் வாகனத்தில் மோதியதில் இவர் பலத்த காயமடைந்தார். இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார். கார் ஓட்டுனர் திருப்பூரை சேர்ந்த வேல்முருகன், 45, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி நடமாட்டம் அதிகம் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் பாலம் அடியில், திருவள்ளுவர் திருமண மண்டப வீதி, மற்றும் தம்மண்ணன வீதி ஆகிய பகுதிகளில் மொபைல் போன் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை அனுப்பி, அதன் ரிசல்ட் பார்த்து தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்று வந்தது தெரிய வந்தது.கையும் களவுமாக பிடிபட்ட ஈரோடு ரமேஷ், 25, பள்ளிபாளையம் தினேஷ்குமார், 30, குமாரபாளையம் வெங்கடேசன், 34, ஈஸ்வரமூர்த்தி, 36, அல்லிமுத்து, 57, ஆகிய 5 பேர்களிடம் 5 டச் மொபைல் போன்களும், தம்மண்ணன் வீதியை சேர்ந்த லோகநாதன், 77, என்ற முதியவரிடம் கேரளா லாட்டரி என்று விற்ற போலி லாட்டரி சீட்டுகள் 252ம் பறிமுதல் செய்யப்பட்டு, 6 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், ஆன் லைன் ரம்மி விளையாட்டில் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகள் உத்திரவின் பேரில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு குற்றாவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை மேலும் தொடரும் எனக் கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story