விபத்தில்லா பட்டாசு வெடிக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: மக்கள் நீதி மய்யம்

விபத்தில்லா பட்டாசு வெடிக்க  விழிப்புணர்வு பிரச்சாரம்: மக்கள் நீதி மய்யம்
X

குமாரபாளையத்தில் விபத்தில்லா பட்டாசு வெடிக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்களுக்கு மகளிரணி சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்  செய்தனர்.

குமாரபாளையத்தில் விபத்தில்லா பட்டாசு வெடிக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் விபத்தில்லா பட்டாசு வெடிப்பது குறித்து 33 வார்டுகளிலும் நகர மகளிரணி சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

மகளிரணி நிர்வாகிகள் சித்ரா,ரேவதி தலைமை வகித்தனர். மாவட்ட செயலர் காமராஜ் துண்டு பிரசுரங்கள் வழங்கி துவக்கி வைத்தார். நகர செயலர் சரவணன் பேசியதாவது:

பட்டாசு வெடிக்கும் போது கவனமாக வெடிக்க வேண்டும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அருகே இருந்து கண்காணிக்க வேண்டும்,

சாலையில் வெடிக்கும் போது போக்குவரத்தை கவனித்து வழிப்போக்கருக்கு இடையூறு இல்லாமல் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்,

ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து அருகே வைத்துக்கொள்ள வேண்டும், புஸ்வானம் விடும் போது முகத்தை அருகில் கொண்டு போக கூடாது, காலில் செருப்பின்றி இருக்க கூடாது,இவ்வாறு அவர் பேசினார்.நிர்வாகிகள் உஷா, சுஜாதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story