குமாரபாளையத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள்: விடியல் ஆரம்பத்தினர் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள்: விடியல் ஆரம்பத்தினர் கொண்டாட்டம்
X

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் நடைபெற்ற அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் அமைப்பின் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி, அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தபட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு புத்தகங்களை பள்ளியின் தலைமையாசிரியை சுகந்தி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி மற்றும் ஆசிரியர் ராஜா ஆகியோர் வழங்கினார்கள்.

மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் முகக்கவசம் கிருமிநாசினி வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆசிரியப் பெருமக்கள் ராணி, சித்ரா, நிர்வாகிகள் மணி கிருஷ்ணா, அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!