குமாரபாளையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சேலம் பெண் கவுன்சிலர்கள் கடத்தல்
கவுன்சிலர்கள் சங்கீதா, பூங்கொடி.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன். ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக 6 அதிமுக உறுப்பினர்களும், திமுக உறுப்பினர்கள் 5பேர் மற்றும் பாமக- கம்யுனிஸ்ட் தலா 1 உறுப்பினர் என 13 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று பனமரத்துபட்டி ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இதன் காரணமாக ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தனது ஆதரவாளர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுடன் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கூடுதுறையில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்ய காரில் வந்தனர்.
அப்போது, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் போலிசாரின் தடுப்பு வேலிகளை சாலையின் குறுக்கே வைத்து பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்த 20 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த 5 வது வார்டு உறுப்பினர் சங்கீதா, 8 வது வார்டு உறுப்பினர் பூங்கொடி ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி தங்கள் காரில் ஏற்றிகொண்டு மின்னல்வேகத்தில் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமாரபாளையம் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர் புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் கூறும்போது, தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கூடுதுறையில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக எனது நண்பரின் காரில் வந்து கொண்டிருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் வந்த பாப்பாரப்பட்டி சுரேஷ் சகோதரர் மகனான கரிகாலன் மற்றும் அவரது அடியாட்கள் 20க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் காரை வழிமறித்து இரண்டு ஊராட்சி ஒன்றிய பெண் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக தூக்கிசென்று காரில் கடத்தினர்.
ஒரு பெண் உறுப்பினருக்கு கத்தியால் காயம் ஏற்படுத்தினர். நாங்கள் அஞ்சி அவரை காவல் நிலையத்தில் புகார் செய்ததாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu