குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்கிய காவல் ஆய்வாளர்

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்திற்கு  உணவுப் பொருட்கள் வழங்கிய காவல் ஆய்வாளர்
X

குமாரபாளையம் வட்டமலை அன்னை அதரவற்றோர் மையத்திற்கு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் உள்ளவர்களுக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்திற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அன்னை ஆதரவற்றோர் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு முன்னாள் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் செல்லவேல், நிலதரகர் மாதேஸ்வரன் உள்ளிட்ட நண்பர்கள் குழுவினர் ஆதரவற்றோர் மையத்திற்கு உதவி செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், 5 நாடா கட்டில்கள் ஆகிய பொருள்களை வாங்கினர்.

இதைத்தொடர்ந்து, குமாரபாளையம் வட்டமலை அன்னை ஆதரவற்றோர் மையத்தில், மைய நிர்வாகி ஹேமமாலினி முன்னிலையில் நடந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் ரவி கலந்து கொண்டு, அரிசி, மளிகை, கட்டில்கள் ஆகிய பொருள்களை முதியவர்களிடம் வழங்கினார். அப்போது, டெலிவிஷன், உணவுப்பொருட்கள் பாதுகாக்க பிரிட்ஜ் ஆகிய சாதனங்கள் வேண்டுமென முதியவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவற்றை விரைவில் வாங்கி தருவதாக காவல்ஆய்வாளர் உறுதியளித்தார். இதில், பொதுநல ஆர்வலர்கள் பாண்டியன், விடியல் பிரகாஷ், தளபதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.




Tags

Next Story