ஆதார் சேவைகளை எளிமை படுத்த, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு

ஆதார் சேவைகளை எளிமை படுத்த, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு
குமாரபாளையம் பகுதியில் ஆதார் சேவைகளை எளிமை படுத்த, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது.
இஃது குறித்து மக்கள் நீதி மய்யம் நாமக்கல் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
குமாரபாளையம் பகுதியில் உள்ள தபால் நிலையம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் ஆதார் சேவை மையத்தில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் செய்வதற்காக மையத்தை நாடினால், அங்கே பிறப்பு சான்றிதழ், படிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போட்டோவுடன் அசல் வேண்டும் என்று கூறுகின்றனர். 20, 30 வருடங்களுக்கு முன்பு படித்தவர்களிடம் படிப்பு சான்றிதழ் கொடுக்கும்போது போட்டோ இருக்காது.
30 வருடத்திற்கு முன் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழ், அதிக பேரிடம் இருக்காது. தற்போது இதனால் மிகவும் பொதுமக்கள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி, தங்களிடம் அரசு சார்ந்து இருக்கும் சான்றிதழ்களை வைத்து குமாரபாளையம் ஆதார் சேவை சம்பந்தமாக அனைத்து சேவைகளையும் குமாரபாளையத்தில் உள்ள தபால் நிலையம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu