பவானியில் கிணறு வெட்டும் தொழிலாளி அதே கிணற்றில் தவறி விழுந்து சாவு

பவானியில் கிணறு வெட்டும் தொழிலாளி அதே  கிணற்றில் தவறி விழுந்து சாவு
X

பைல் படம்.

பவானியில் கிணறு வெட்டும் தொழிலாளி அதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை அடுத்த குள்ளனூரை சேர்ந்தவர் கணேசன், வயது 44. இவர் கிணறு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், பவானி அருகே காடப்பநல்லூரில் உள்ள பழனிச்சாமி மற்றும் கணேசன் ஆகியோரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடந்த மூன்று மாதங்களாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து, அளவீடு செய்து பணம் வாங்குவதற்காக உடன் பணியாற்றும் சிவசங்கருடன் நேற்று மாலை 1:30 மணியளவில் டேப் கொண்டு அளந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கணேசன் கால் தவறி கிணற்றில் விழுந்தார்.

உடனடியாக அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கிணற்றின் மேலே கொண்டுவந்தனர். ஆனால், அவர் கிணற்றின் உள்ளேயே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வந்த பவானி காவல்நிலைய எஸ்.ஐ., வடிவேல்குமார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!