/* */

கூலி தொழிலாளியின் இடது காதை கடித்து துண்டாக்கிய தொழிற்சங்க மாநில செயலர்

குமாரபாளையத்தில் கூலி தொழிலாளியின் இடது காதை தொழிற்சங்க மாநில செயலர் கடித்து துண்டாக்கினார்.

HIGHLIGHTS

கூலி தொழிலாளியின் இடது காதை கடித்து துண்டாக்கிய தொழிற்சங்க மாநில செயலர்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் விட்டலபுரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 46. கூலித் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் காலை 10:30 மணியளவில் வர சந்தை பின்புற சாலையில் தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தை ஒட்டியவாறு வந்து கொண்டிருக்க, ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில செயலர் சுப்பிரமணி வேகமாக வந்து இவரது வாகனத்தில் மோத மணிகண்டன் நிலைதடுமாறினார்.

இது குறித்து சுப்பிரமணிஇடம் பார்த்து போக கூடாதா? என்று கேட்க, சுப்ரமணி தகாத வார்த்தை பேசியவாறு அருகில் வந்து கழுத்தை கடிக்க முயற்சிக்க, மணிகண்டன் சுதாரித்து எழுந்து நின்றார். அப்போதும் விடாமல் மணிகண்டனின் இடது காதை கடித்து துப்பி அங்கிருந்து தப்பியோடினார்.

இதனால் மணிகண்டனை துண்டான காதுடன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேலம் ஜி.ஹெச்.க்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய சுப்ரமணியை தேடி வருகின்றனர்.

Updated On: 29 Aug 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்