குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து:  ஒருவர் உயிரிழப்பு
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் சுப்ரமணியம், 33, எலெக்ட்ரிசியன். இவர் நேற்று மாலை 01:20 மணியளவில் ஹீரோ ஸ்ப்லேண்டர் வாகனத்தில் சேலம் கோவை புறவழிச்சாலை ராயல் பள்ளி பிரிவு சாலை எதிர் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர் திசையில் ஒருவழி பாதையில் வேகமாக வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் சுப்ரமணியம் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சுப்ரமணியம் வரும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் லாரி ஓட்டுனர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த பெர்க்மான்ஸ், 60, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி