குமாரபாளையம் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்ட வழிகாட்டி பலகை
குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் போக்குவரத்து சீர் படுத்தவும், பொதுமக்கள் நன்மை கருதியும், வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டது.
குமாரபாளையம் அருகே வழிகாட்டி பலகை அமைத்தமைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
குமாரபாளையம் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே 5 சாலை பிரிவு உள்ளது. இந்த பகுதியில் டூவீலர், பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் என பலதரப்பட்ட வாகனங்கள் தாறுமாறாக சென்று வருவதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இங்கு ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என நீண்ட வருடமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் எந்தெந்த சாலை, எங்கு செல்கிறது என தெரியாமல், கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருபவர்கள், குமாரபாளையம் நகரில் ஜவுளிகள் வாங்க வருபவர்கள், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் வருபவர்கள், பள்ளிபாளையம், திருச்செங்கோடு செல்பவர்கள் என பலரும் தவித்து வருகிறார்கள். எனவே வழிகாட்டி பலகை அமைக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். கோரிக்கையின் நியாயம் உணர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது பொதுமக்கள் நன்மை கருதி, இந்த இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா, நிர்வாகிகள் மல்லிகா, விமலா, உஷா,ரேவதி உள்பட பலர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
மேலும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர். இனி இந்த பகுதியில் அறிவிப்பு பலகையை பார்த்து பொதுமக்கள் எளிதாக தாங்கள் செல்ல வேண்டிய சாலையில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu