குமாரபாளையம் மக்களுக்கு உள்ளூரில் வீடு கட்டி கொடுக்க கோரிக்கை

குமாரபாளையம் மக்களுக்கு உள்ளூரில் வீடு கட்டி கொடுக்க கோரிக்கை
X

குமாரபாளையம் மக்களுக்கு உள்ளூரில் வீடு கட்டி கொடுக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் மக்களுக்கு உள்ளூரில் வீடு கட்டி கொடுக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் மக்களுக்கு உள்ளூரில் வீடு கட்டி கொடுக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நகர மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறுகையில், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான மணிமேகலை தெரு, அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். காவிரியில் வெள்ளம் வந்தால் இவர்கள் மண்டபங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

அடிக்கடி வெள்ளம் வருவதும், இவர்கள் இப்படி தங்க வைக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைவரும் குமாரபாளையத்தில் விசைத்தறி கூலி தொழில் செய்து வருகின்றனர். வெள்ளம் வந்தால் இவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது. இவர்களுக்கு நிரந்தர தீர்வாக குமாரபாளையம் பகுதியில் இலவச வீடுகள் கட்டிக்கொடுத்து, வெள்ள பாதிப்பில் இருந்து நகரை பாதுகாக்க மணிமேகலை தெரு முதல் காவேரி நகர் வரை தடுப்பு சுவர் காவேரி ஆற்றின் கரை பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!