குமாரபாளையத்தில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் சி.பி.எம். சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் சி.பி.எம். சார்பில், ஆனங்கூர் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் சி.பி.எம். சார்பில் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்திடு, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்திடு, கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடு, என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி ஆனங்கூர் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர குழு நிர்வாகிகள் காளியப்பன், கந்தசாமி, மாதேஸ்வரன் கிளை செயலர்கள் சரவணன், மோகன், வெங்கடேசன், முன்னாள் நகர செயலர் ஆறுமுகம், உள்பட பலர் பங்கேற்றனர்.

மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்க கூடாது என வலியுறுத்தி குமாரபாளையத்தில் சி.பி.எம். சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குமாரபாளையம் நகர குழு சார்பில் குமாரபாளையம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்க கூடாது என வலியுறுத்தியும் மத்திய ஒன்றிய அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கைவிட கோரியும், நகர குழு செயலாளர் என் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மின்வாரிய துணை இயக்குனர் வல்லப்பதாஸ் வசம் நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது.

மனுவில் கூறியிருப்பதாவது:

மின்வாரியத்தை மூன்றாக பிரித்து, வீடுகள், விசைத்தறி, விவசாயம் போன்றவற்றிற்கு உள்ள மானியத்தை பறிக்க கூடிய வகையில், முன் பணம் செலுத்தி, உச்ச பட்ச நேரத்திற்கு கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்தல், மின் ஊழியர்களுக்கு நிரந்தர ஓய்வூதியம் பறிப்பு, என அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தாமல் நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் .அசோகன் மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன் முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகம், நகர குழு உறுப்பினர்கள் கந்தசாமி, சரவணன், காளியப்பன், சண்முகம், மாதேஷ் கிளை செயலாளர்கள் மோகன், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story