ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு

ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்கும்போது ஒருவர் தவறி விழுந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

குமாரபாளையத்தில் ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்கும் போது தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குமாரபாளையம் காவேரி ஆற்றின் ஓரம் கலைமகள் வீதியில் குடியிருந்து வருபவர் பழனிசாமி, 63. இவர் ஆக. 7ல் வீட்டின் படியில் நின்றவாறு ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. இவர் சிகிச்சைக்காக பெருந்துறை ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இவர் நேற்று பகல் 12:30 மணியளவில் இறந்தார்.

Tags

Next Story