குமாரபாளையம் அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
குமாரபாளையத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியில் கணவர் மற்றும் தன் இரு பெண் குழந்தைகளுடன் வசிப்பவர் பரமேஸ்வரி(வயழ 24.). மூத்த குழந்தை யாழிசை,( 5.) எல்.கே.ஜி. படித்து வருகிறார். இளைய குழந்தை ஹர்சினி,(1 ½ .) நேற்றுமுன்தினம் இவர்களும், குமாரபாளையம் சேரன் நகரில் வசிக்கும் இவரது தங்கை ரேவதி குடும்பத்தாரும் பழனி சென்றனர்.
கோவிலுக்கு சென்று விட்டு, நள்ளிரவில் ரேவதியின் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளனர். இரவு நேரத்தில் அங்கேயே படுத்து தூங்கி விட்டனர். நேற்று அதிகாலை 04:00 மணியளவில் ரேவதியின் கணவர் சுரேஷ் என்பவர், பரமேஸ்வரியை எழுப்பி, அருகில் படுத்திருந்த குழந்தை ஹர்சினியை காணவில்லை என்று சொல்ல, அனைவரும் எழுந்து தேடத் தொடங்கினர். வீட்டின் முன்புற கதவு திறந்து இருந்தது. வாசலில் உள்ள கேட் மூடியிருந்த நிலையில், கேட்டுக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மூடி திறந்து இருந்த நிலையில் பார்த்த போது, தண்ணீர் கலங்கி இருந்தது. சுரேஷ், தொட்டியில் குதித்து தேடிய போது, குழந்தை நீரில் மூழ்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது டாக்டர்கள் இல்லாத நிலையில், பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu