சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நாவல் பழம் விற்பனை ‘ஜோர்’
குமாரபாளையத்தில் நாவல் பழம் விற்பனை நடந்தது.
குமாரபாளையத்தில் நாவல் பழ விற்பனை ஜோராக நடந்தது.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் நாவல் பழங்கள் விற்கப்பட்டது. அவ்வழியே செல்லும் நபர்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இது குறித்து
வியாபாரி முகமது அலி ஜின்னா கூறியதாவது:
நாவல் பழ விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும். நிறைய கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி., பி., அடங்கியுள்ள இந்த விதைகள், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு துணை புரிகிறது. மூளையும் பலம் பெறும். நினைவாற்றலும் அதிகரிக்கும். புரோட்டீன், மெக்னீசியம், குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இப்படி பல சத்துக்களை அடக்கியதுதான் நாவல் பழம்.. இதய நோய்கள் வராமல் தடுப்பதில் நாவல் பழத்திற்கு பெரும் பங்கு உண்டு. ஞாபக சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.
உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கக்கூடியது. உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பழத்தை தேர்வு செய்யலாம்.. காரணம், மிகக்குறைந்த கலோரி பழம் என்பதுடன், உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை உண்டு. வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த இலைகளை சுத்தமாக கழுவி, அதை இடித்து சாறு எடுத்து, 3 நாட்கள் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு கட்டுப்படும். அல்லது நாவல் மரத்தின் இலைக்கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்... நாவல் இலை: நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu