வேலைக்கு வந்த முதல் நாளே நெஞ்சு வலியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி

வேலைக்கு வந்த முதல் நாளே நெஞ்சு வலியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி
X
குமாரபாளையத்தில் வேலைக்கு வந்த முதல் நாளே நெஞ்சு வலியால் வட மாநில தொழிலாளி உயிரிழந்து உள்ளார்.

குமாரபாளையத்தில் வேலைக்கு வந்த முதல் நாளே நெஞ்சு வலியால் வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் சோனப்பூர் மாவட்டம், பசோணி பகுதியை சேர்ந்தவர் ஜுபராஜ் ஹரிபால் (வயது 42.) இவரை அதே ஊரை சேர்ந்த திலிப் தாண்டியா, (26,) என்பவர், குமாரபாளையம், ஆனங்கூர் சாலையில் உள்ள, தான் பணியாற்றும் மில்லில் பணியில் சேர்க்க நேற்றுமுன்தினம் குமாரபாளையம் அழைத்து வந்தார்.

நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தயாரான போது, ஜுபராஜ் ஹரிபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மில் மேலாளர் வசம் கூற, மில் வாகனத்தில் அவரை அழைத்துக்கொண்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காட்டிய போது, வழியில் அவர் இறந்து விட்டார் என்று டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

பணியில் சேர்ந்த முதல் நாளே வட மாநில தொழிலளி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!