டூவீலர் மீது தனியார் நிறுவன பஸ் மோதியதில் தாய், இரு மகள்கள் படுகாயம்

டூவீலர் மீது தனியார் நிறுவன பஸ் மோதியதில் தாய், இரு மகள்கள் படுகாயம்
X
குமாரபாளையத்தில் டூவீலர் மீது தனியார் நிறுவன பஸ் மோதிய விபத்தில் தாய், இரு மகள்கள் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை, குமரன் மருத்துவமனை பின்புறம் வசிப்பவர் கலைமணி(வயது 34.). இவர் தனது குழந்தைகள் ரினிதாஸ்ரீ,( 6,) சிவஸ்ரீ, (3,) ஆகிய இருவரையும் தனது டி.வி.எஸ். ஸ்கூட்டி வாகனத்தில் தனியார் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. இந்த பஸ் டூவீலர் மீது மோதியதில் மூவரும் வண்டியுடன் கீழே விழுந்ததில் மூவரும் காயமடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ.சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்/

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது